இன்று மீண்டும் ஏறிய தங்க விலை – புதிய உச்சத்தை எட்டிய பவுன்

 இலங்கையில் இன்று (15) தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாவால் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க சந்தை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுன் 392,000 ரூபாவிற்கும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 360,600 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்க விலையின் இந்த உயர்வு முதலீட்டாளர்கள், நகை விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.