உயிர்த்த ஞாயிறு விசாரணை: நீதிமன்றத்தில் புதிய ரிட் மனு.



 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) வருண ஜயசுந்தர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் (Writ) மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளனர்.