முறையற்ற கடவுச்சீட்டை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராக சஷி வீரவங்ச தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (11) நிராகரித்துள்ளது.
இஸ்ரேல் நீண்டகாலமாக முன்வைத்து வரும் கோரிக்கைக்கு அமைவாக, காசா பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி ம...
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்தத் தீர்ப்பை அறிவித்தார். அவர், கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்பு வழங்கிய தீர்ப்பு சரியானது என உறுதி செய்ததாக தெரிவித்தார்.
முன்னதாக, 2022 ஆம் ஆண்டு கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சஷி வீரவங்சவுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தண்டனைகளில் இருந்து விடுதலை கோரி அவர் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போதைய தீர்ப்பின் மூலம் அந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
Reviewed by UPDATE
on
June 10, 2026
Rating: 5