செம்மணி மனித புதைகுழியில் 5 எலும்புக்கூடுகள் மீட்பு – குழந்தை எலும்புக்கூடு கண்டுபிடிப்பு.



செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளில் இன்று மேலும் ஒரு முக்கிய முன்னேற்றம் பதிவாகியுள்ளது. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 28வது நாளில், ஒரு குழந்தையின் எலும்புக்கூடு உட்பட மொத்தம் 5 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதனுடன், புதிதாக மேலும் 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அகழ்வு பணிகளின் போது சிறு பாசிமணி துண்டுகள், கை வளையல்கள், ஆணிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட சான்று பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், பெரிய உலோக துண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதன் உள்ளே எலும்புக்கூடுகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதி மிகுந்த கவனத்துடன் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் அடிப்படையில் மொத்தம் 387 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 367 எலும்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.