யாழ்ப்பாணத்தில் எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா படத்துக்கு செருப்பு மாலை பதாகை.


 யாழ்ப்பாணம் – சின்னக்கடை சந்திப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட பதாகை ஒன்று இன்று (19) காட்சிப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த பதாகை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த நடவடிக்கை இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை சுமார் 10 மணியளவில் சம்பவ இடத்துக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, அந்த பதாகையை அகற்றி தனது வாகனத்தில் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவதால், யாழ்ப்பாண அரசியல் சூழலில் இது பேசுபொருளாகியுள்ளது.