உலகக் கிண்ணம்: பிரேசிலும் கனடாவும் காலிறுதிக்கு முன்னேற்றம்.



 2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் 32 அணிகளுக்கிடையிலான நாக் அவுட் சுற்றில், ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரேசில் அணி காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

போட்டியின் 29ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கைஷு சனோ (Kaishu Sano) முதல் கோலை அடித்து தனது அணியை முன்னிலைப் படுத்தினார்.

இதற்கு பதிலடி கொடுத்த பிரேசில் அணிக்காக 56ஆவது நிமிடத்தில் காசெமிரோ (Casemiro) சமநிலைக் கோலை பதிவு செய்தார்.

90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் பெற்றிருந்ததால், போட்டி மேலதிக நேரத்துக்கு சென்றது.

மேலதிக நேரத்தின் இறுதி நிமிடத்தில் கேப்ரியல் மார்டினெல்லி (Gabriel Martinelli) வெற்றிக் கோலை அடித்ததன் மூலம், பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்து காலிறுதிக்குள் முன்னேறியது.

இதேவேளை, 32 அணிகளுக்கிடையிலான மற்றொரு போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட கனடா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

90 நிமிடங்களில் இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்கப்படாத நிலையில், மேலதிக நேரத்தில் ஸ்டீபன் யூஸ்டாக்கியோ (Stephen Eustáquio) அடித்த ஒரே கோல் கனடாவுக்கு வெற்றியைத் தேடித்தந்தது.