பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் புனானை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (01) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், மட்டக்களப்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி, பின்புற இருக்கையில் பயணித்த பெண் ஒருவர் மற்றும் மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் வெலிக்கந்த மற்றும் வாழைச்சேனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் வெலிக்கந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 20 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனிடையே, விபத்தில் டிப்பர் வாகனமும் கவிழ்ந்துள்ளதாகவும், அதன் சாரதியும் காயமடைந்த நிலையில் வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
