மேஷம் முதல் மீனம் வரை – இன்றைய தின பலன்கள் இதோ.



 இன்று (27) சந்திரன் மிதுன ராசியில் சஞ்சாரம் செய்யும் நிலையில், சித்த யோகம் மற்றும் சுக்ராதித்ய யோகம் உருவாகும் சிறப்பான நாளாக ஜோதிட ரீதியாகக் கருதப்படுகிறது. இந்த யோகங்கள் பல ராசிக்காரர்களுக்கு கௌரவம், தனவரவு மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தை வழங்கக்கூடியதாக இருக்கும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், விருச்சிக ராசியில் உள்ள அனுஷம் மற்றும் பின்னர் கேட்டை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் காணப்படுவதால் சில ராசிக்காரர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்ப அமைதியும் துணைவரின் ஆதரவும் கிடைக்கக்கூடும். ரிஷப ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வேலை தொடர்பான விடயங்களில் முன்னேற்றத்தை காணலாம். மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழல் உருவாகும்.

கடக ராசிக்காரர்களுக்கு புதிய திட்டங்கள் வெற்றியை தரும் வாய்ப்பு காணப்படுகின்றது. சிம்ம ராசிக்காரர்கள் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கக்கூடிய நாளாக அமையும். கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருந்து முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கும்.

துலாம் ராசிக்காரர்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியதுடன், விருச்சிக ராசிக்காரர்கள் நிதி மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும். தனுசு ராசிக்காரர்கள் உடல்நலத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது அவசியமாகும்.

மகர ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வரவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதுடன், கும்ப ராசிக்காரர்களுக்கு பணியிட சூழல் சாதகமாக மாறும். மீன ராசிக்காரர்கள் உறவுகளில் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படுவது நல்ல பலனை தரும் என தெரிவிக்கப்படுகிறது.