பேராதனை பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் மாணவர் வசதிகள் தொடர்பான நிலவும் சிக்கல்களுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு கோரி, பேராதனை பல்கலைக்கழக மகா மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (26) பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் ஆரம்பமான இந்த பேரணி காரணமாக, பேராதனையிலிருந்து கம்பளை வரையான பிரதான வீதியின் ஒரு போக்குவரத்துப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில் பேரணி அமைதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
