🚨 MV Hondius கப்பலில் வைரஸ் அச்சம்! ஸ்பெயின் பயணிக்கு ஹன்டா வைரஸ் உறுதி

 எம்.வி. ஹோன்டியஸ் (MV Hondius) சொகுசு கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்பெயின் நாட்டு பயணி ஒருவருக்கு ஹன்டா வைரஸ் (Hantavirus) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



அர்ஜெண்டினாவில் இருந்து Cape Verde நோக்கிப் பயணம் மேற்கொண்டிருந்த MV Hondius சொகுசு கப்பலில் பயணம் செய்த சில சுற்றுலா பயணிகளுக்கு ஹன்டா வைரஸ் தொற்று இருப்பது முன்பதாக கண்டறியப்பட்டிருந்தது.

இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 3 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த சம்பவம் பல நாடுகளில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக கப்பலில் இருந்த 14 பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் ஒருவரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பயணிக்கு தற்போது ஹன்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொடர்பான மேலதிக சுகாதார கண்காணிப்புகள் மற்றும் ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உலக சுகாதார அதிகாரிகளும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.