நேற்று (13), பரிமாற்றப் பகுதியை ஒட்டிய அளுத்கம – மத்துகம வீதி வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக, கொழும்பு நோக்கி நுழையும் வாயில், கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் வெளியேறும் வாயில் மற்றும் காலியிலிருந்து வரும் வாகனங்கள் வெளியேறும் வாயில் ஆகியவை சொகுசு மற்றும் சிறிய ரக வாகனங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
எனினும், தற்போது வெள்ள நீர் முழுமையாக வடிந்துள்ள நிலையில், போக்குவரத்து நடவடிக்கைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும், வெலிபென்ன பரிமாற்ற நுழைவாயில்கள் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.