இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு IMF மீண்டும் முழு ஆதரவு உறுதி



 இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையையும், பொருளாதார மீட்சிக்கான முயற்சிகளையும் தொடர்ந்து ஆதரிப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட IMF தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக், அண்மைக் காலங்களில் இலங்கை இரண்டு முக்கிய பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

அதில் முதன்மையானது “டித்வா” புயல் காரணமாக ஏற்பட்ட இயற்கை அனர்த்த பாதிப்புகள் என அவர் குறிப்பிட்டார். இந்த அனர்த்தம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, மத்திய கிழக்கில் நீடித்து வரும் போரின் தாக்கமும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு சவாலாக அமைந்துள்ளதாக ஜூலி கோசாக் தெரிவித்தார்.

இவ்வாறான சவால்கள் இருந்தபோதிலும், இலங்கை மக்களும் நாட்டின்