கணேமுல்ல சஞ்சீவ என்பவரின் கொலை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என அழைக்கப்படும் ஒஸ்மண்ட் குணசேகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்தபோது, அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் ரக துப்பாக்கி ஒன்று, இரண்டு மெகசின்கள் மற்றும் 10 தோட்டாக்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நபர் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு தரப்பினர் தொடர்ந்து விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
.jpeg)