பராக்கா அணுமின் நிலைய தாக்குதல் சர்வதேச சட்ட மீறல் – ஐ.நா.




 ஐக்கிய அரபு அமீரகத்தின் பராக்கா அணுமின் நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை வன்மையாகக் கண்டித்துள்ளது.

இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டங்களுக்கு எதிரான ஒரு கடுமையான மீறல் எனவும், அணு பாதுகாப்பு தொடர்பான உலகளாவிய அச்சத்தை அதிகரிக்கும் செயல் எனவும் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

எனினும், தாக்குதலுக்குப் பொறுப்பான தரப்பை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இதுவரை அதிகாரப்பூர்வமாக பெயரிடவில்லை.

இதற்கிடையில், கடந்த வாரம் ஈராக்கிலிருந்து ஆறு ட்ரோன்கள் தங்களது நாட்டை நோக்கி ஏவப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்திருந்தது. அவற்றில் ஒரு ட்ரோன் பராக்கா அணுமின் நிலையத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.