புத்தங்கல பகுதியிலிருந்து ஹோல்மன்கல நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், பாலிகா சுற்றுவட்டம் பகுதியில் இருந்து அம்பாறை பொது வைத்தியசாலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் நேற்றிரவு மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஐவரில் மூவர் படுகாயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் தடயந்தலாவ மற்றும் நவகம்புர பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதியின் யாலேகம சந்திக்கு அருகில் மற்றொரு விபத்தும் பதிவாகியுள்ளது.
காலி நோக்கிப் பயணித்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பாதசாரி மீது மோதியதில், பலத்த காயமடைந்த அவர் பலபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், விபத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேகநபரை கைது செய்ய கொஸ்கொட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
