தாய்லாந்தில் இருந்து போதைப்பொருள் கடத்திய வழக்கு: 23 பிக்குகள் மீண்டும் விளக்கமறியலில்!

 தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களை


நாட்டுக்குள் கொண்டு வந்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (12) நீர்கொழும்பு நீதவான் சுபாணி அபேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றிருந்த 22 பிக்குகள், கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி இலங்கைக்கு திரும்பியபோது, அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் இருந்து 112 கிலோகிராம் ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

மேலும், விசாரணைகளின் போது ‘அமிதானந்த’ என்ற பிக்கு இந்த சட்டவிரோத நடவடிக்கையை ஒருங்கிணைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர், கம்பஹா பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் மறைந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.