வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்த காலப்பகுதியில்
அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இந்தியாவில் இருந்து மட்டும் 18,533 பேர் இலங்கைக்கு வந்துள்ளதுடன், அது மொத்த வருகையின் சுமார் 40 சதவீதமாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, சீனாவில் இருந்து 3,472 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,517 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 2,441 பேரும் இலங்கைக்கு சுற்றுலா நோக்கில் வருகை தந்துள்ளனர்.
இதனிடையே, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் மே 10 வரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 922,883 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 208,451 பேரும், ரஷ்யாவிலிருந்து 74,628 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 91,362 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
சுற்றுலாத்துறை மீட்சியடைந்து வரும் நிலையில், இந்த ஆண்டில் சுற்றுலா வருவாய் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
