தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ காலமான செய்தி மொனராகலை மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரதுகலா பழங்குடியின கிராமத்தின் தலைவராக பணியாற்றிய அவர், உடல்நலக்குறைவு காரணமாக வெலிசர மார்பக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 62 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
பழங்குடியின மக்களின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து குரல் கொடுத்த முக்கிய தலைவர்களில் ஒருவராக சுதா வன்னில எத்தோ அறியப்பட்டார். அவரது மறைவு, ரதுகலா பழங்குடியின சமூகத்திற்கே பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.
அவரது மறைவுக்கு சமூக ஆர்வலர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.