ரயில் முனையத்திலிருந்து மருதானை ரயில் மேடையில் நிறுத்தப்பட்டிருந்த பெட்டிகளுடன் இணைக்கும் வகையில் நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தபோது, மருதானை பாலத்திற்கு அருகில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் ரயில் இயந்திரத்தின் நான்கு சக்கரங்கள் தடம் புரண்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மருதானை மற்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில்பாதையின் ஒரு பகுதி முழுமையாக முடக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
