இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில், இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களும், கியூபா குடியரசின் இலங்கைக்கான தூதுவர் மேன்மைதங்கிய பட்ரீசியா லசாரா குவேராவும் இதில் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கம், இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்வதும், பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயற்பாடுகளை வலுப்படுத்துவதுமாக அமைந்தது.
இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவை நினைவுகூர்ந்த அமைச்சர், இரு நாடுகளின் சட்டமன்றங்களுக்கு இடையிலான பாராளுமன்ற இராஜதந்திரத்தை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது என வலியுறுத்தினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த கியூப தூதுவர், சுகாதாரம், விளையாட்டு, விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும், இரு பாராளுமன்ற நட்புறவு சங்க உறுப்பினர்களுக்கிடையே நெருங்கிய தொடர்பை உருவாக்கும் வகையில் விரைவில் ஒரு மெய்நிகர் சந்திப்பை ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கியூபாவின் முன்னாள் தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவின் பிறந்த நூற்றாண்டு நினைவு நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்க உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpeg)