நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையிலும் இரவிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்பரப்புகளில் காற்று தென்மேற்குத் திசையிலிருந்து வீசும் என எதிர்பார்க்கப்படுவதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை காணப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் அவ்வப்போது காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் அலைகள் 2.0 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை எழக்கூடும் எனவும் (இது கரைக்கு வரும் அலை உயரம் அல்ல) குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை நேரங்களில் கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசக்கூடியதால், கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் மீனவர்கள் மற்றும் கடல் பயணிகள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
