இலங்கைக்கு வடகிழக்கே நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் இலங்கையை விட்டு விலகி படிப்படியாக பலவீனமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தால் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பும் காணப்படுகின்றது. மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக தற்போது நிலவும் மழைக்கால சூழ்நிலை எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மேலும் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகப்பு / இலங்கை /
உடன் செய்தி /
வானியல்
/ இலங்கையில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
.jpg)