உடப்பில் புதிதாக திருமணமான இளைஞர் உயிரிழப்பு: களப்பில் இருந்து சடலம் மீட்பு



Udappu பகுதியில் உள்ள பூனபிட்டிய களப்பில் இருந்து புதிதாக திருமணமான இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (12) மாலை கண்டெடுக்கப்பட்ட இந்த சடலம், உடப்பு பெரியபாடு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரின் உடலாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் தனியாக மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அவர் தனது மிதிவண்டியில் பூனபிட்டிய களப்பிற்கு சென்றிருந்ததாகவும், பின்னர் ஏதோ ஒரு காரணத்தினால் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை Sri Lanka Police உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.