அதேபோல், கிரிந்திவெலயில் 332 மில்லிமீற்றரும், கேகாலை ப்ரென்றித் தோட்டப் பகுதியில் 291.5 மில்லிமீற்றரும், கலட்டுவாவையில் 237 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
லம்புகமையில் 224 மில்லிமீற்றரும், ஹங்வெல்லையில் 216 மில்லிமீற்றரும், தும்மலசூரியவில் 215.7 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சிவப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், பலத்த மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் (Red Alert) விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpeg)