போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள “முழுநாடுமே ஒன்றாக” தேசிய செயல்பாட்டு சபையின் கூட்டம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது, சட்ட அமலாக்கத்தின்போது கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை தாமதமின்றி அழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. மேலும், அந்தச் சட்ட திருத்தங்களை விரைவாக நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் மற்றும் அவற்றுக்கான சட்ட கட்டமைப்புகள் குறித்து தேசிய செயல்பாட்டு சபைக்கு விரிவான விளக்கமும் வழங்கப்பட்டது.
இதனுடன், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை உடனடியாக அழிப்பதன் அவசியம் தொடர்பாக தேசிய சபை உறுப்பினர்கள் தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளையும் முன்வைத்தனர்.
எதிர்காலத்தில் தேவையான புதிய சட்டத் திருத்தங்கள் சட்ட வரைஞர் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpeg)