வல்வெட்டித்துறையில் 18 கிலோ கேரள கஞ்சா மீட்பு – மேலதிக விசாரணைகள் தீவிரம்

 யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பொயிண்ட் பேட்ரோ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லிபுரம் – முள்ளி பகுதியில் 18 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




வவுனியா இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா தொகை பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொயிண்ட் பேட்ரோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்புகள் தெரிவித்துள்ளன.