வியட்நாம் - இலங்கை இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்!

 

வியட்நாம் மற்றும் இலங்கை இடையிலான முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல துறைகளில் இந்த உடன்படிக்கை முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.