அதன்படி, இன்று காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் 22(6) வரையிலான பிரிவுகளுக்கமைய பாராளுமன்ற அலுவல்கள் இடம்பெறவுள்ளன.
அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
மேலும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விகள் முன்வைக்கப்படவுள்ளன.
இதேவேளை, காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் அரசாங்கத்தால் நடத்தப்படவுள்ளது.