லொறி ஒன்றில் சட்டவிரோதமாக கால்நடைகள் கடத்தப்படுவதாக ஹுங்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (20) காலை கட்டகடுவ பகுதியில் வீதித் தடை அமைக்கப்பட்டது.
எனினும், குறித்த லொறி அந்த வீதித் தடையை மீறி தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பொலிஸார் லொறியை பின்தொடர்ந்து நிறுத்த முயன்ற போதிலும் அது நிறுத்தப்படாமல் சென்றதால், அதனை நிறுத்தும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுட்டுச் சம்பவத்திற்குப் பிறகு லொறி நிறுத்தப்பட்டதுடன், அதிலிருந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
