கொரியாவில் பணிபுரிந்து பின்னர் மீண்டும் நாடு திரும்பி இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விருப்பம் இருப்பின், அதற்கான முழுமையான அரசாங்க ஆதரவு வழங்கப்படும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
நேற்று (26) வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்ற குழுவொன்றை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரிய அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்தி வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை கொரிய உற்பத்தித் துறையில் 1,067 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 68 பேருக்கு நேற்று இறுதி தெளிவூட்டல் மற்றும் விமான பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
