அஸ்வெசும திட்டம்: முதியோர் கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்.

 



அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாத கொடுப்பனவுகளை நாளை (29) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, அஸ்வெசும திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்ற சுமார் 7 லட்சம் முதியவர்களுக்காக அரசாங்கம் மொத்தமாக ரூ. 3,493,915,000 நிதியை விடுவித்துள்ளது.

கட்டங்களின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விபரங்கள் பின்வருமாறு:

முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 625,128 பயனாளிகளுக்காக ரூ. 3,125,600,000 வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 73,663 பயனாளிகளுக்காக ரூ. 368,315,000 ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைத்து தகுதியுடைய பயனாளிகளும் தங்களுக்குரிய முதியோர் கொடுப்பனவை நாளை முதல் அஸ்வெசும பயனாளர் வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் அறிவித்துள்ளது.