இன்று (27) பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருவதாக முதலமைச்சர் விஜய் கவலை வெளியிட்டுள்ளார்.
2026ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 12 கைது சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், தற்போது 58 மீனவர்கள் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்துமாறு இந்திய பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
