நேற்று (25) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகள், சந்தை நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார தாக்கங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த மார்ச் மாதத்தில் ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை 7.75 சதவீதமாக மாற்றமின்றி பேணுவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய வட்டி உயர்வு நாட்டின் பணவீக்கம், கடன் சந்தை மற்றும் பொருளாதார செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
.jpeg)