சரண குணவர்தனவுக்கு எதிரான ஊழல் வழக்குகளின் தீர்ப்பு இன்று

 


ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு வழக்குகளின் தீர்ப்புகள் இன்று (26) அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் இந்த வழக்குகளின் தீர்ப்புகளை அறிவிக்கவிருந்த நிலையில், பின்னர் அவை மே 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

2006ஆம் ஆண்டு தேசிய லொத்தர் சபையின் தலைவராக பணியாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதில் அரசாங்கத்திற்கு நிதி நஷ்டம் ஏற்பட்டதாகக் குற்றம் சுமத்தி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சரண குணவர்தனவுக்கு எதிராக இந்த நான்கு வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு அரசியல் மற்றும் சட்டவியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.