பெண்கள் பாதுகாப்புக்கு விஜயின் அதிரடி திட்டம்! – “சிங்கப்பெண்” சிறப்பு படைக்கு அரசாணை வெளியீடு

 விஜய் தலைமையிலான புதிய தமிழக அரசு, பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” அமைக்கும் திட்டத்திற்கான அரசாணையை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.




தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவையின் முதலமைச்சராக நேற்று பதவியேற்ற விஜய், நேரு உள்விளையாட்டு அரங்கம்த்தில் நடைபெற்ற பதவியேற்பு விழா மேடையிலேயே பல முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் பெண்கள் பாதுகாப்பை மையமாகக் கொண்ட “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படை திட்டமும் முக்கிய இடம் பெற்றிருந்தது.

தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே அறிவிக்கப்பட்டிருந்த இந்தத் திட்டம் தற்போது அரசாணை மூலம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசாணையின் படி, முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இந்த சிறப்பு படையில்:

  • ஒரு ஐஜி (IG)
  • ஒரு எஸ்.பி (SP)
  • இரண்டு டி.எஸ்.பிகள் (DSP)
  • நான்கு காவல் ஆய்வாளர்கள்

உள்ளடங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படை தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூகநலத்துறை மற்றும் கல்வித்துறையுடன் இணைந்து பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், பெண்கள் தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு, மீட்பு மற்றும் தேவையான உதவிகள் விரைவாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் இந்த சிறப்பு படை செயல்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றத்தை உருவாக்கும் திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.a