ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளின் தீர்ப்பு இன்று (26) வெளியிடப்படவுள்ளது.
இந்த தீர்ப்பை முன்னிட்டு, சரண குணவர்தன தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய லொத்தர் சபையுடன் தொடர்புடைய நிதி முறைகேடு மற்றும் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கின் தீர்ப்பு அரசியல் மற்றும் சட்டவியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
.jpeg)