நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லேல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவின் உதாகலகம பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அந்தப் பகுதியில் வசித்து வந்த 12 குடும்பங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்ட இந்த மண்சரிவு அபாயம் தொடர்பாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் புவியியலாளர்கள் கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். அதன் பின்னர், குறித்த பகுதி அதிக ஆபத்துள்ள மண்சரிவு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று (22) காலை 6.30 மணியளவில் மீண்டும் மண்சரிவு ஏற்படக்கூடிய அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
.jpeg)