வடக்கு சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 82 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்த விபத்தில் சிக்கி 9 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வெடிப்பு இடம்பெற்ற சமயத்தில் சுரங்கத்தின் உள்ளே மொத்தம் 247 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அனர்த்தத்தின் காரணம் தொடர்பில் சீன அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.