அளுத்கம, மொரகல்ல கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறக் கடற்கரையில், உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் மனிதத் தலை ஒன்று இன்று (23) காலை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அளுத்கம பொலிஸாருக்கு கிடைத்த அவசர தொலைபேசி தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போது இந்த மனிதத் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டிருப்பது ஆண் ஒருவரின் தலை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
.jpeg)