இந்த தாக்குதல் தொடர்பாக நைஜீரியாவும் அமெரிக்காவும் இணைந்து உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலகளவில் “மிகவும் ஆபத்தான தீவிரவாதி” எனக் கருதப்பட்ட ஐஎஸ் அமைப்பின் உலகளாவிய நடவடிக்கைகளுக்கான தலைவரான அபு-பிலால் அல்-மினுகி (Abu-Bilal al-Minuki), வடகிழக்கு நைஜீரியாவின் தொலைதூர கிராமப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
அந்தப் பகுதியில் 2009 ஆம் ஆண்டு முதல் போகோ ஹராம் அமைப்பும், அதிலிருந்து பிரிந்து உருவான ஐஎஸ் அமைப்பின் மேற்கு ஆப்பிரிக்க கிளையும் ஆயுதம்கொண்ட கிளர்ச்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 17 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த மோதல்களால் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களது வாழிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கப் படையினர் நைஜீரியாவிற்கு சென்றபோது, ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கும் நோக்கத்திற்காக மட்டுமே அவர்கள் அங்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போதைய கூட்டுத் தாக்குதல் மூலம் அமெரிக்க இராணுவம் அங்குள்ள இராணுவ நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டு வருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
.jpeg)