கொலொன்ன, வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள பாழடைந்த வீடு ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கொலொன்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கொலொன்ன பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், உயிரிழந்தவரின் தலைப் பகுதிக்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்பட்டதுடன், அவரது காலில் வெட்டுக்காயம் என சந்தேகிக்கப்படும் காயம் ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மரணமடைந்தவர் தனது மனைவியிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாகவும், கடந்த மே 18 ஆம் திகதி மாலை தனது சகோதரியின் வீட்டிலிருந்து குறித்த பாழடைந்த வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர் பெரும்பாலும் அந்த வீட்டிலேயே தங்கி வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானது என கருதப்படுவதால், சம்பவம் தொடர்பில் கொலொன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
.jpeg)