கொட்டகலையில் அரிய நிகழ்வு; தண்டின் நடுவில் தோன்றிய வாழைக்குலை.



 கொட்டகலை - பாத்தியாபுரம் பகுதியில் உள்ள வீட்டு தோட்டம் ஒன்றில் காணப்பட்ட விசித்திரமான வாழைமரம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக வாழைமரத்தின் உச்சிப் பகுதியிலேயே வாழைக்குலை தோன்றுவது வழக்கம். எனினும், இந்த வாழைமரத்தில் தண்டின் நடுப்பகுதியில், இரு தண்டுகளுக்கு இடையில் இருந்து வாழைக்குலை வெளிவந்துள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த அரிய நிகழ்வை காண அப்பகுதி மக்கள் பலரும் ஆர்வத்துடன் அந்த வீட்டுத் தோட்டத்திற்குச் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும், இந்த வித்தியாசமான வாழைமரத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.