அதன்படி, பிரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.44 சதவீதத்தால் உயர்ந்து, 111.7 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
மேலும், டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108.32 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக உலக எண்ணெய் சந்தையில் பதற்றம் அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன் விளைவாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் வேகமான உயர்வை பதிவு செய்து வருகின்றன.
