கடும் மழையால் கொழும்பு–அவிசாவளை வீதி பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு.

 




களனி கங்கை பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக அவிசாவளையிலிருந்து ஹங்வெல்ல வரையான பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கொழும்பு–அவிசாவளை பிரதான வீதியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக ‘அத தெரண’ செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புவக்பிட்டிய தும்மோதர சந்தி, சீதாவக்க தாவரவியல் பூங்கா மற்றும் எட்டியாந்தோட்டை பகுதியின் சில இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, பலுமஹர–கடுவெல புதிய கண்டி வீதியின் உடுப்பில பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதிகளில் இலகுரக வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.