சிலாபம் வைத்தியசாலை சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கின – நோயாளர்கள் இடமாற்றம்.

 


நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சிலாபம் பொது வைத்தியசாலையின் மூன்று சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக குறித்த சிகிச்சை அறைகளில் இருந்த நோயாளிகள் பாதுகாப்பாக வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தினேஷ் கொக்கல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று இரவு முதல் பெய்து வரும் பலத்த மழையால் புத்தளம் மாவட்டத்தின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், சில பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

புத்தளம்–மாதம்பை, கலகிட்டியாவ வீதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் அந்த வீதியில் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு மாதம்பை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.