நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்து தற்போது உலகளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘கருப்பு’.
இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்.
திரிஷா, இந்திரன்ஸ், அனாகா, ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் செய்து வருகிறது.
தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் இதுவரை 280 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் வரும் நாட்களிலும் வசூல் வேகம் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், படம் 300 கோடி ரூபாய் மைல்கல்லை எட்டும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
