கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் ஏற்பட்ட தாக்குதலால் 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த நிலையில் குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று (29) அதிகாலை அவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் கொழும்பு – 15, ஹேனமுல்ல முகாம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விசாரணை தகவலின்படி, அவரது வீட்டிற்கு அருகில் முச்சக்கரவண்டி ஒன்றை நிறுத்தி சிலர் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த தாக்குதலுக்கு காரணமாகியுள்ளது. வாக்குவாதம் தீவிரமடைந்ததை தொடர்ந்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
.jpeg)