இதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஒப்புதலுக்கு உட்பட்டு, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தத்தை நீடிப்பதற்கான ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு தரப்பும் போர்நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீடிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு சம்மதித்துள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இறுதி அங்கீகாரம் இன்னும் பெறப்பட வேண்டியுள்ளது. இந்த செய்தி முதன்முதலில் Axios ஊடகத்தால் வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த 60 நாள் காலப்பகுதியில் ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
