‘கருப்பு’ திரைப்படம் 275 கோடி வசூல் கடந்து மாபெரும் சாதனை.



 கடந்த மே 15ஆம் திகதி வெளியான ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

சிங்கம் 2 திரைப்படத்திற்கு பின்னர் சுமார் 13 ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வெற்றியை ‘கருப்பு’ திரைப்படம் தற்போது நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சூர்யாவின் திரை வாழ்க்கையில் முதல் முறையாக 200 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்த படமாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாவுக்கும் மேல் வசூலித்த படமாகவும் இப்படம் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 12 நாட்களை கடந்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் இதுவரை 275 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் 300 கோடி ரூபா வசூல் மைல்கல்லை அடையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.