கச்சா எண்ணெய் 100 டொலருக்கு கீழ் வீழ்ச்சி.



 உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (27) குறைவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இடம்பெற்று வரும் விலை சரிவின் காரணமாக, பல முக்கிய கச்சா எண்ணெய் வகைகள் 100 அமெரிக்க டொலருக்கும் கீழான நிலையை எட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சந்தைத் தரவுகளின்படி, ‘பிரெண்ட்’ (Brent) வகை கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 97.33 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதேபோல், ‘டபிள்யூ.டி.ஐ’ (WTI) வகை கச்சா எண்ணெயின் விலையும் 97.33 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ‘மர்பன்’ (Murban) வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 95.05 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விலை சரிவு உலக எரிசக்தி சந்தையில் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.